கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் முதன்மை காவலராக பணியாற்றியவர் ரமாமணி. இவர், ஸ்கூட்டியில் இன்று (அக்.11) சென்றுகொண்டிருந்த நிலையில், இடதுபுறத்தில் இருந்து வலதுபுறமாக திரும்பியுள்ளார். அப்போது, பெங்களூருவில் இருந்து அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர், அந்த பெண் காவலர் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட காவலர் படுகாயமடைந்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனை கொண்டுசென்ற நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.