பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில்
திமுக மற்றும் விசிகவினர் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், திடீரென இரு தரப்பினரும் கற்கள் மற்றும் கட்டைகளால் மாறி மாறி தாக்கி கொள்ளும் அளவிற்கான மோதலாக வெடித்தது.
திமுக மூத்த தலைவர் ஆ.ராசாவை கண்டித்து விசிகவினர்
ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில், அதற்கு போட்டியாக திமுகவினரும் போராட்டத்தில் இறங்கியதால், இரு தரப்பிற்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி திரண்டவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நன்றி:NewsTamil