அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையம் அருகே விமானம் கோர விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. சரக்கு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானம் வெடித்துச் சிதறி, அதிக அளவில் தீ மற்றும் புகை மளமளவென பரவியது. இதில் அருகில் இருந்த பல கட்டிடங்கள் எரிந்தன. அந்த விமானத்தில் மூன்று பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.