தமிழகத்தில் பயங்கரவாத சதி முறியடிப்பு: ஐ.எஸ்.ஐ தொடர்புடைய 8 பேர் கைது

5037பார்த்தது
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 8 பேரை தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூரில் ஆடை தொழிலாளர்களாக மறைந்து வாழ்ந்த இவர்கள், டெல்லியில் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டியதும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகளை அடிப்படையாக கொண்டு, டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி:News18