TET தேர்வு.. வினாத்தாளை மாற்றி கொடுத்ததாக புகார்

5பார்த்தது
திருநெல்வேலி மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாளை மாற்றித் தந்து குளறுபடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் வேறு பாட வினாத்தாள் தந்ததாக புகார், வேலூரைச் சேர்ந்த சினோன் என்பவர் புகார் அளித்துள்ளார். வணிகவியல் பாடத்திற்கு விண்ணப்பத்திருந்த நிலையில் அவருக்கு மொழிப்பாட வினாத்தாள் வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.

நன்றி: நியூஸ்18