மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக,
திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். மதுராந்தகத்தில் தவெகவின் மரகதம் குமரவேல், திமுகவின் ஐ.பரந்தாமன், தாராபுரத்தில் தவெகவின் சத்தியபாமா, திமுகவின் எஸ்.சுகன்யா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அதே போல் தனித்து போட்டியிடும் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் இன்று தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கின்றன. இந்த இடைத்தேர்தலில் அதிமுக, நாதகவும் போட்டியிடுவதால் 5 முனைப்போட்டி நிலவுகிறது.