பிரபல நடிகர் அஜித் குமார் தீவிரமாக கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில் அவர் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரரை போல விக்கெட் கீப்பிங் செய்வதோடு மட்டுமின்றி, மைதானத்தில் அதிரடியாக பேட்டிங் செய்து சில அருமையான ஷாட்டுகளையும் அடித்து அசத்தியுள்ளார்.