ஜீவாவின் 45-வது படமாக உருவான 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதிஷ் சஹதேவ் இயக்கியுள்ள இப்படத்தில் பிரார்தனா நாயகியாக நடித்துள்ளார்; தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படம், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.