நடிகர் ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (ஜன.11) நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் தம்பி ராமையா, 'ஜனநாயகன்' பட சென்சார் விவகாரம் குறித்து கவலை தெரிவித்தார். தமிழ் திரைப்பட வியாபாரத்தை விரிவுபடுத்துவதில் ரஜினி, கமல், விஜய்க்கு முக்கிய பங்கு உண்டு என்றும், 'ஜனநாயகன்' படம் முடங்கியிருப்பது சினிமா ஆர்வலர்களைக் கவலை கொள்ளச் செய்யும் என்றும் அவர் கூறினார்.