
செந்துறையில் வாக்காளர் சிறப்பு முகாம்
அரியலூர் மாவட்டம் செந்துரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பாக நிலை அலுவலர் அம்பிகா தலைமையில், சிறப்பு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் அடங்கிய முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, புதிய வாக்காளர் பெயர்களைச் சேர்த்தனர் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். வாக்காளர் சரிபார்ப்புப் பணியில் பொதுமக்கள் தீவிரமாகப் பங்கேற்றனர்.
























