2, 000 டன் நெல் மூட்டைகள் சேலம் அனுப்பி வைப்பு

0பார்த்தது
2, 000 டன் நெல் மூட்டைகள் சேலம் அனுப்பி வைப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி மூலம் அறுவடையாகும் நெல், கொள்முதல் நிலையங்கள் வழியாக சேமிக்கப்பட்டு, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் பகுதிகளில் உள்ள 254 கொள்முதல் நிலையங்களில் இருந்து 2,000 டன் நெல் மூட்டைகள் 116 லாரிகளில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, சரக்கு ரயிலின் 42 வேகன்களில் வெள்ளிக்கிழமை சேலத்திற்கு அரவைக்காக அனுப்பப்பட்டது. நடப்பாண்டில் ரயில் மூலம் அனுப்பப்படும் முதல் இயக்கம் இதுவாகும். நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் மெய்கண்டமூர்த்தி, தர ஆய்வாளர்கள் மற்றும் ரயில் நிலைய மேலாளர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி