தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு ரயில் மூலம் 27 லட்சத்து 30 ஆயிரம் சாக்குகள் வந்துள்ளன. மேற்கு வங்க மாநிலம் கல்கத்தாவிலிருந்து ரயில் மூலம் வந்த 42 பெட்டிகளில் இந்த சாக்குகள் கொண்டுவரப்பட்டன. கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களுக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குருவை நெல் கொள்முதல் செய்ய உள்ள நிலையில், சாக்குகள் போதுமான அளவு இருப்பதாகவும், தேவைப்பட்டால் மேலும் வரவழைக்கப்படும் என்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.