தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் புதுக்குடியைச் சேர்ந்த மூ. கணேசன்(38) என்பவரிடம், வேலை நிமித்தமாக கும்பகோணம் வந்தபோது, 2024, மே 2-ம் தேதி இரவு 3 பேர் தாக்கி செல்போன், கையடக்க கணினி, ரூ. 20 ஆயிரம் பறித்துச் சென்றனர். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விஜய்(24), செந்தில்குமார்(25), ராஜ சேகரன்(25) ஆகியோரை கைது செய்தனர். கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.