கும்பகோணம்: டூ-வீலர் மீது லாரி மோதி வாலிபர் பலி

71பார்த்தது
கும்பகோணம்: டூ-வீலர் மீது லாரி மோதி வாலிபர் பலி
கும்பகோணம் அருகே உள்ள கீழேபரட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சிவகுமார் வயது 23. இவருடைய உறவினர் மகள் கிரிஜா 21. இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்று வருகிறார். 

நேற்று (ஜூன் 13) இரவு சிவகுமார் மோட்டார் சைக்கிளில் கிரிஜாவை ஊருக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போழுது அசூர்-நீலத்தநல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வாலிபர் சிவகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். 

படுகாயம் அடைந்த இளம் பெண் கிரிஜா கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி