கும்பகோணத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநாடு

59பார்த்தது
கும்பகோணத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநாடு
கும்பகோணத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் நாகமுத்து, ரங்கசாமி, சாமிகண்ணு, சரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் மாரியப்பன் மாநாட்டை தொடங்கி வைத்தார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவருமான சின்னதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆற்றங்கரையிலும், குளக்கரைகளிலும் வசிக்கும் விவசாயிகளுக்கு குடியிருப்புப் பட்டா வழங்க வேண்டும், 

நிலம் இல்லாத விவசாயிகளுக்கு கேரள மாநிலத்தைப் போல் நிலம் வழங்க ஆவண செய்ய வேண்டும், பஞ்சமி நிலத்தை அரசு கண்டறிந்து அதை மீட்டு நிலம் இல்லாத ஆதிதிராவிடர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி