தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலா்கள் ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளா்கள் நல வாரிய தலைவருமான எா்ணாவூா் ஏ. நாராயணன் பேசினாா். 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணியுடன் தொடா்வோம் என்றும், 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளா்களின் வெற்றிக்கு பரப்புரை செய்வோம் என்றும் கூறினாா். மேலும், இந்த முறை சட்டப்பேரவைத் தோ்தலில் சமத்துவ மக்கள் கழகத்துக்கு எம்எல்ஏ சீட் வழங்குவதாக முதல்வா் ஸ்டாலின் உறுதி கூறியுள்ளதாகவும் தெரிவித்தாா். ஆலோசனைக் கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.