தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் 56 ஆவது அமைதி ஊர்வலம் நேற்று (பிப்.3) நடைபெற்றது. தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் 56 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம் தாராசுரம் காய்கனி வணிக வளாகம் முன்பு தொடங்கியது. பிராதான சாலை வழியாக சென்று ரவுண்டானாவில் உள்ள அண்ணாத்துரை முழு உருவ சிலைக்கு க. அன்பழகன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் ஒன்றியச் செயலர்கள் உள்ளூர் டி. கணேசன், எஸ். கே. முத்துச்செல்வம், ஜெ. சுதாகர், பேரூர் செயலர்கள் சுவாமிமலை எஸ்எம்எஸ் பாலசுப்பிரமணியன், சோழபுரம் ஜெ. ஜப்ருதீன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் க. செந்தில்குமார், அரசு சிறப்பு வழக்குரைஞர் பா. விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.