தவெக நிர்வாகி வாகனங்களின் கண்ணாடிகளை அடித்தும் உடைப்பு கைது

1பார்த்தது
தவெக நிர்வாகி வாகனங்களின் கண்ணாடிகளை அடித்தும் உடைப்பு கைது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரம் எம்ஜிஆர் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த பிறந்தநாள் விழாவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், இருவர் அரிவாளால் வெட்டப்பட்டனர். மேலும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, ஜீப் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சேதமடைந்த ஜீப் உரிமையாளரும், தமிழக வெற்றிக்கழக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட இணைச்செயலருமான எஸ். பிரபாகரன் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீஸார் 3 பேரை கைது செய்து, மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். வெட்டுக்காயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி