கும்பகோணம் இரிடியம் மோசடி: மலேசியாவிலிருந்து வந்தவர் கைது

1147பார்த்தது
கும்பகோணம் இரிடியம் மோசடி: மலேசியாவிலிருந்து வந்தவர் கைது
கும்பகோணத்தில் 2014-ஆம் ஆண்டு நடந்த இரிடியம் விற்பனை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த செந்தில் (32) என்பவர் மலேசியாவிலிருந்து சென்னை வந்தபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் நீதிமன்ற பிடி ஆணையின் பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சென்னை விமான நிலைய போலீஸார் அளித்த தகவலின் பேரில், செந்திலை கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி