கும்பகோணத்தில் நவ. 29 இல் பாஜக நிர்வாகிகள் சங்கமம் மாநாடு

0பார்த்தது
கும்பகோணத்தில் நவ. 29 இல் பாஜக நிர்வாகிகள் சங்கமம் மாநாடு
பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பிரிவு மாநில மாவட்ட நிர்வாகிகளின் சங்கமம் - 2025 மாநாடு நவம்பர் 29 அன்று கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாநிலப் பிரிவு பொறுப்பாளர் ராகவன் தலைமை வகித்தார். மாநாட்டில் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ், மத்திய அமைச்சர்கள் எல். முருகன், முரளி முகாலே, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 25 ஆயிரம் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டணிக் கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள் என இணை அமைப்பாளர் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி