அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு

0பார்த்தது
அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக எம். மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் ஒன்றியம் வலையப்பேட்டை ஊராட்சி அம்மாபேட்டையைச் சேர்ந்த எம். மகாலிங்கம், தனது நிலத்தை அளவீடு செய்ய நீதிமன்ற உத்தரவு பெற்ற நிலையில், சனிக்கிழமை அன்று வருவாய்த்துறையினர் மற்றும் நில அளவையாளர் பாதுகாப்புடன் அளவீடு செய்ய வந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி, அவரது மகன் சுரேஷ், முருகன், மகன் கார்த்திக் உள்ளிட்டோர் அதிகாரிகளின் பணியைத் தடுத்து, மகாலிங்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி