தஞ்சை: சரக்கு பாட்டிலுக்கு கூடுதல் ரூ.20 வசூல் : 3 பேர் சஸ்பெண்ட்

1007பார்த்தது
தஞ்சை: சரக்கு பாட்டிலுக்கு கூடுதல் ரூ.20 வசூல் : 3 பேர் சஸ்பெண்ட்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே எஸ். புதூர் டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட மதுபாட்டிலுக்கு ரூ. 20 கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தமிழ்மணி நடத்திய விசாரணையில் புகார் உறுதியானது. இதையடுத்து, கடை மேற்பார்வையாளர்கள் மனோகரன், ஆறுமுகம் மற்றும் விற்பனையாளர் சேகர் ஆகிய 3 ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி