கும்பகோணம் புறநகர் பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த மே 7 தேதி முதல் தற்காலிகமாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நெய்வேலி, ஜெயங்கொண்டம், அணைக்கரை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் குடந்தை டவுன் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.