நாளை மறுநாள் தஞ்சை வரும் முதலமைச்சர், பாதுகாப்பு தீவிரம்

0பார்த்தது
நாளை மறுநாள் தஞ்சை வரும் முதலமைச்சர், பாதுகாப்பு தீவிரம்
தஞ்சாவூரில் நாளை மறுநாள் (மார்ச் 5) நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தர உள்ளனர். நாளை மறுநாள் காலை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் குடும்பத் திருமண விழாவைத் தலைமை தாங்கி நடத்தி வைக்கும் முதல்வர், தொடர்ந்து கரந்தை தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ச. ராமநாதன் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். முதல்வரின் வருகையையொட்டி தஞ்சாவூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி