திமுக சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்திடம் புகார்

1பார்த்தது
திமுக சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்திடம் புகார்
இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுப் பணத்தைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற நினைக்கும் திமுக மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சியினர் பரப்புரையைத் தொடங்கிவிட்டதாகவும், அனைத்து கட்சிகளுக்கும் சமவாய்ப்பை தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், திமுகவினர் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி வருவதாகவும், அதற்காக திமுக சின்னத்தை முடக்க இந்து மக்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி