தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாவட்ட தலைவர் டி. ஆர். லோகநாதன் அவர்கள் தலைமையில் சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் புகழை பறைசாற்றும் வகையில் கும்பகோணத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நடைபயண பேரணியாக சென்று அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் அவர்களுக்கு பரிந்துரை செய்ய கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேயர் க. சரவணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.