கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் ரூபாய் மூன்று கோடியில் மினி ஸ்டேடியம் கட்டும் பணிக்கு இந்திய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்லூரியில் காலியாக உள்ள 4 ஏக்கர் நிலத்தில் மினி ஸ்டேடியம் கட்ட அரசு அனுமதி அளித்த நிலையில், இது விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு போதிய இடவசதி இருக்காது என மாணவர்கள் கூறினர். இதனால் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கல்லூரி புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக மினி ஸ்டேடியம் கட்டும் பணி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.