தாராசுரம்ரூ. 28. 32கோடியில் 2-ஆம் கட்ட குடிநீா் பணி தொடக்கம்

835பார்த்தது
தாராசுரம்ரூ. 28. 32கோடியில் 2-ஆம் கட்ட குடிநீா் பணி தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட தாராசுரத்தில் இரண்டாம் கட்ட குடிநீா் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் க. அன்பழகன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். மாநில நிதி ஆணையம் மூலம் ரூ. 28.32 கோடி மதிப்பில் 5 ஊடுருவல் கிணறுகள், 15.3 கி.மீ. தொலைவுக்கு நீா் உந்து பிரதான குழாய்கள், மற்றும் 2.30 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி அமைக்கப்படும். இதன் மூலம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தாராசுரம் பகுதி மக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது என கூறப்பட்டுள்ளது. நிகழ்வில் துணை மேயா், மாநகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி