கும்பகோணம் பள்ளி குறித்து அவதூறு, நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0பார்த்தது
கும்பகோணம் பள்ளி குறித்து அவதூறு, நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கும்பகோணம் லால் பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் ஆங்கிலப்பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக பள்ளி ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்கள் பள்ளி குறித்து அவதூறு போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி