சென்னை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக திமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், மாநகர செயலாளர் சுப தமிழழகன், லால்குடி தொகுதி பொறுப்பாளர் உத்திராபதி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் முக்கிய அரசியல் மற்றும் கட்சி சார்ந்த ஆலோசனைகள் நடைபெற்றன.