கும்பகோணம்: டிரம்ஸ் இசைக்கலைஞர் குத்தி கொலை; சக நண்பர்கள் கைது

1466பார்த்தது
கும்பகோணம்: டிரம்ஸ் இசைக்கலைஞர் குத்தி கொலை; சக நண்பர்கள் கைது
கும்பகோணம் அருகே ஏரகாரம் பகுதியைச் சேர்ந்த ட்ரம்ஸ் இசைக்கலைஞர் பாலாஜி (25), மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அபிஷேக் (18), பிரவீன் (19) ஆகியோரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். வயலில் சடலமாக கிடந்த பாலாஜியின் உடலை கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி அபிஷேக், பிரவீனை கைது செய்தனர். காதலிக்கும் பெண்ணை பாலாஜி வீட்டில் தங்க வைத்தது தொடர்பாக அபிஷேக்கின் குடும்பத்தினருடன் முன்விரோதம் இருந்தது இந்த கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி