நியாய விலை கடை பணியாளர்கள் டிச. 12 ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

2பார்த்தது
நியாய விலை கடை பணியாளர்கள் டிச. 12 ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறையை ஏற்படுத்த வேண்டும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக எடை தராசையும், நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை பொட்டலம் இடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து வாகனம் மூலம் சென்று 400 பேர் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.