கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய கடைத்தெருவில் உள்ள ஒரு பர்னிச்சர் விற்பனை மற்றும் தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மரச்சட்டங்கள் மற்றும் மெத்தைகளில் பரவிய தீயால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து விரைந்து வந்த கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.