கும்பகோணம் சட்டமன்ற அலுவலகத்தில், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், 13 விவசாயிகளுக்கு மானியத்துடன் மொத்தம் ரூ. 15 லட்சத்து 61 ஆயிரத்து 978 மதிப்பிலான 13 கை டிராக்டர்களை வழங்கினார். இந்த நிகழ்வில் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சுதாகர், கும்பகோணம் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஐயப்பன், இளநிலை பொறியாளர்கள் கோகுல் ராஜன், பவுல்ராஜ், திட்டப்பணி உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.