கும்பகோணம்: போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க ஐஜி அறிவுறுத்தல்

65பார்த்தது
கும்பகோணம்: போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க ஐஜி அறிவுறுத்தல்
கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்திய ஐஜி ஏ. கயல்விழிபோக்சோ வழக்குகளை விரைவாக முடிக்குமாறு காவல் ஆய்வாளர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.) ஏ. கயல்விழி அறிவுறுத்தினார்.

கும்பகோணம் உதவிக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களுடன் இவர் வெள்ளிக்கிழமை நடத்திய ஆலோசனைக்குப் பின் கூறுகையில், போக்சோ வழக்கு தொடர்பான ஆதாரங்களை உறுதியான ஆவணங்களுடன் சமர்ப்பித்து வழக்கை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர்.கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டியன், கும்பகோணம் கோட்டக் காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கித்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you