கும்பகோணத்தில் அமைச்சர் கோவி செழியன் பேட்டி

1பார்த்தது
தமிழகத்தில் மு. க ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, இதுவரை 34 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 64 அரசு கலைக்கல்லூரிகளில் 2வது சிப்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டதால் அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை இருமுறைகளில் மொத்தம் 1,432 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வரும் டிசம்பர் 20ம் தேதி டிஆர்பி மூலம் தேர்ச்சி பெற்ற 2,704 பேர் நிரந்தர பேராசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி