பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி நிறுத்தப்படும் அபாயம்...?

680பார்த்தது
பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி நிறுத்தப்படும் அபாயம்...?
தஞ்சை மாவட்டத்தில், பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் விடுபட்ட மற்றும் தவணை நிறுத்தப்பட்ட விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. ஜூலை மாதம் 23வது தவணைத் தொகை வழங்கப்பட உள்ள நிலையில், தகுதியுடைய விவசாயிகள் மற்றும் இறந்த பயனாளிகளின் வாரிசுகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு, e-KYC பதிவு, நில ஆவணங்கள் மற்றும் விவசாயிகள் தனித்துவ அடையாளப் பதிவு போன்றவற்றை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால் அடுத்த தவணைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி