கும்பகோணம்: தாராசுரம் ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

76பார்த்தது
கும்பகோணம்: தாராசுரம் ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தாராசுரம் மேலச்சத்திரம் தெலுங்குத் தெருவில் அருள்மிகு ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் மே 29-இல் தேவதா பிரார்த்தனையுடன் தொடங்கியது. 

தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வியாழக்கிழமை மங்கள இசையுடன் தொடங்கி, விக்னேஸ்வர பூஜை, யாக பூஜைகள், நவசக்தி அர்ச்சனை உள்ளிட்டவைகள் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீ வினைதீர்த்த விநாயகர், ஸ்ரீ சாத்தாவுராயன், ஸ்ரீ அரசமரத்து விநாயகர், ஸ்ரீ நாகர் கும்பாபிஷேகம் நடைபெற்று, பின்னர் ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் விமானத்திற்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கிராமவாசிகள், இளைஞர் அணியினர் செய்தனர். பட விளக்கம்: கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

தொடர்புடைய செய்தி