கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டி தவமணியின் வீட்டில், வாடகைக்கு வீடு கேட்பது போல் புர்கா அணிந்து வந்த நபர் ஒருவர், கண்ணில் மிளகாய் பொடி தூவி கத்தியைக் காட்டி மிரட்டி, 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.