கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை பருவத் தேர்வுகளை 4,040 மாணவர்கள் எழுதினர். நேற்று கல்லூரி முதல்வர் கோவிந்தராசு தலைமையில் நடைபெற்ற தேர்ச்சிக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்கள் தங்கள் துறைகள் மூலமாகவோ அல்லது கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.gacakum.ac.in வாயிலாகவோ தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.