கும்பகோணம் எம்.எல்.ஏ.வின் அதிரடி: அசூர் குப்பை மேடு அகற்றும் பணி துவக்கம்

798பார்த்தது
கும்பகோணம் எம்.எல்.ஏ.வின் அதிரடி: அசூர் குப்பை மேடு அகற்றும் பணி துவக்கம்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் பைபாஸ் சாலையில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக மாறியதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், புதிய சட்டமன்ற உறுப்பினர் வினோத் ரவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் பேசி குப்பை மேட்டை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதனால் அப்பகுதி மக்கள் சுகாதாரமான சூழலில் வாழ முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முந்தைய சட்டமன்ற உறுப்பினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி