கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்

50பார்த்தது
கும்பகோணம், மார்ச். 29-கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சு. ப. தமிழழகன், ஆணையர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணத்திற்கு புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியதற்கு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர் கே. என். நேருவுக்கும், பஸ் நிலையத்தை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கல்யாண சுந்தரம் எம். பி., அமைச்சர் கோவி. செழியன், அன்பழகன் எம். எல். ஏ ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் மாநகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரி இலக்கை தாண்டி வசூலிக்கப்பட்டுள்ளது. தாராசுரம் பகுதியில் குடிநீர் வழங்க அமைப்பு ரீதியாக ரூ. 29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றிற்கு அரசுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி பாராட்டுகள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

தொடர்புடைய செய்தி