கும்பகோணம் ராஜன் தோட்டம் வளாகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், கும்பகோணம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் ஜூன் 2-ம் தேதி முற்பகல் 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் செட்டிமண்டபம், திப்பிராஜபுரம், நாச்சியார்கோவில், செம்மங்குடி, திருவிடைமருதூர், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, கதிராமங்கலம், பந்தநல்லூர், கோணுளாம்பள்ளம், குறிச்சி, திருப்பனந்தாள், சோழபுரம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.