கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி வழங்கப்பட்ட நிலையில், திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொண்டதால், காங்கிரஸ் மேயர் சரவணன் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. 40 திமுக உறுப்பினர்கள் மற்றும் 2 காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ள மாநகராட்சியில், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணனுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. தற்போது, திமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயர் சரவணனை அகற்றிவிட்டு திமுகவைச் சேர்ந்த ஒருவரை மேயராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதனால், துணை மேயராக உள்ள சுப தமிழழகன் மேயராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.