கும்பகோணத்தில் பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயல் தலைவர் நாகராஜன், டாஸ்மாக் கடைகளில் நடக்கும் தவறுகளுக்கு பணியாளர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் சந்திக்கும் கூடுதல் வாடகை, மின்கட்டணம் போன்ற பிரச்சினைகளையும் அரசு உளவுத்துறை மூலம் ஆராய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், 24 ஆண்டுகளாக தற்காலிகப் பணியில் உள்ளவர்களைப் பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், அதன் பிறகும் தவறுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.