நவம்பர் 8, நுண்கதிர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் விஞ்ஞானி ரான்ட்ஜன் எக்ஸ்-ரே கதிரைக் கண்டுபிடித்ததை கொண்டாடினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளைத் தலைவர் தலைமையில், நுண்கதிர் பிரிவைச் சேர்ந்த 12 ரேடியோகிராபர்கள் ரத்ததானம் செய்தனர். நுண்கதிர்நுட்புனர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், ஓய்வு பெற்ற தலைமை நுண்கதிர் நுட்புனர் சண்முகம் ரான்ஜென் சேவைகள் குறித்து பேசினார். மருத்துவர்கள் இராஜேஷ்வரன், பிரியா மற்றும் சிடி ஸ்கேன் ரேடியோகிராபர் அகிலா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.