கும்பகோணம் பகுதியில் மினி வாட்டர் டேங் திறப்பு

0பார்த்தது
கும்பகோணம் பகுதியில் மினி வாட்டர் டேங் திறப்பு
தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீலத்தநல்லூர் ஊராட்சியில், மேலத்தெருவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 4.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மினி வாட்டர் டேங்கை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய செயலாளர் டி கணேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ. சுதாகர், ஒன்றிய துணை செயலாளர் கே. நேரு, பொருளாளர் பவுன்ராஜ், மாவட்ட பிரதிநிதி இஸ்ரேல், சுரேஷ், கந்தசாமி, பகுதி செயலாளர் இராஜா, முருகேசன், மூர்த்தி, கேசவன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் அறிவழகன், செல்வகுமார், விஸ்வநாதன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் பொது மக்களுடன் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you