தஞ்சை வடக்கு மாவட்டம், பாபநாசம் தொகுதி, சுவாமிமலை பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 8.44 லட்சம் மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையல் கூடம் தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய செயலாளர் டி. கணேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ. சுதாகர், பேரூராட்சி செயலாளர் பாலசுப்ரமணியம், துணை செயலாளர் கோபால், பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிவகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர் லட்சுமி பிரியா கோபால், ஜெமினி, இளவரசி ராமலிங்கம், குணாளன் மற்றும் முன்னாள் மாவட்ட பிரதிநிதி கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.