கும்பகோணம்: வங்கி ஏடிஎம் இல் எடுத்த பணம் திருட்டு

72பார்த்தது
கும்பகோணம்: வங்கி ஏடிஎம் இல் எடுத்த பணம் திருட்டு
கும்பகோணத்தில் வங்கி ஏடிஎம் இல் பணம் எடுத்து ஸ்கூட்டி வாகனத்தில் வைத்துவிட்டு டீ சாப்பிட சென்ற போது பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம் மேல அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் மகன் வீரமுத்து (வயது 58) விவசாயி. இவர் கடந்த வியாழக்கிழமை கும்பகோணம் பஜார் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி முன்புறம் ஸ்கூட்டி வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு வங்கி ஏடிஎம் இல் ரூபாய் 90 ஆயிரம் பணத்தை எடுத்தார். பின்னர் பணத்தை இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு எதிர்புறம் உள்ள கடையில் டீ குடிக்க சென்றார். 

பின்னர் திரும்ப வந்து பார்த்த போது ஸ்கூட்டி வாகனத்திலை இருக்கை திறந்து இருந்தது, அதை திறந்து பார்த்த போது உள்ளே வைத்திருந்த ரூபாய் 90 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது பற்றி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்கு பதிவு செய்து பணம் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி