நாச்சியார்கோவில் அருகே கோமளவள்ளிப்பேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயச்சந்திரன், குடும்பத்துடன் கோவில் திருவிழாவிற்குச் சென்றிருந்த போது அவரது வீடு தீப்பற்றி எரிந்தது. கும்பகோணம் தீயணைப்புத் துறையினர் சுமார் 1.30 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் எரிந்து நாசமடைந்ததாக நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.